1. அனைத்திந்திய நெல் அபிவிருத்தித் திட்டம்மேல்..
1.1979-80 ஆம் ஆண்டில் ஐதராபாத் நெல் ஆராய்ச்சி இயக்குநகரத்தால் அனைத்திந்திய நெல் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் பரிசோதனை மையமாக கண்டறியப்பட்டது.
2.மேம்படுத்தப்பட்ட நெல் இரகங்களை அவற்றின். மகசூல் திறன் உட்பட பயிர் மேலாண்மை, இரக செயல்பாடு, பொருந்தும் தன்மை, பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புதிறன் போன்றவை சோதனை செய்யப்படுகின்றன.
3.புதுச்சேரி பகுதிக்கேற்ற புதிய நெல் இரகங்கள் வெளியிடப்படுகின்றன.
2. வேளாண் தொழில் பாடப் பிரிவுமேல்..
1.16.12.1992 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
2.விஞ்ஞான முறைப்படி வேளாண்மை செய்வது குறித்து வேளாண் இளைஞர்களுக்கு கற்பித்தல்.
3.சுய வேலை வாய்ப்பிற்கு உறுதுணையாய் அமைகிறது.
4.இது ஒரு வருட சான்றிதழ் பாடப் பிரிவு.
5.மாதத்திற்கு 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
6.ஆண்டிற்கு 24 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
3. திசு வளர்ப்பு ஆய்வகம்மேல்..
1.13.1.1996 அன்று ஆரம்பிக்கபட்டது
2.மும்பை, பாபா அணு சக்தி ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வழிகட்டுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
3.திசு வளர் முறையில் செடிகள் உருவாக்கப்பட்டு பசுமையகத்தில் கடினப்படுத்தப்படுகின்றன.
4.கடினப்படுத்தப்பட்ட கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
5.கனகாம்பரம், ரோஜா மற்றும் அழகீடு மலர்கள் போன்றவையும் திசு வளர் முறையில் உருவாக்கப்படுகின்றன.
6.மாணவர்கள் திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அறிவு மையமாக திகழ்கிறது.
7.புதிய வீறிய இரக அழகீடு மலர் செடி ஒன்று உருவாக்கப்பட்டு புதுவை காமராஜ் என்ற பெயரில் லண்டன் தோட்டக்கலைக்கான ராயல் சோசைட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
New Orchid Hybrid (Dendrobium) Puduvai Kamaraj developed by this KVK and registered with the Royal Society of      Horticulture, London.
4. உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம்மேல்..
1.1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2.பெங்களூர், வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகளுக்கான தேசிய செயலகத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டது.
3.1999 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டட்டத்தின்போது முதல் உயிர் காரணியாக டைக்கோகிராமா முட்டை ஓட்டுண்ணி அட்டைகள் வெளியிடப்பட்டன.
4.பலவிதமான உயிர்ரக பூச்சிகொல்லிகளையும் உயிர்ரக பூஞ்ஞான கொல்லிகளையும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது.
5.மாணவர்கள் திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அறிவு மையமாக திகழ்கிறது.
5. தோட்டக்கலை பிரிவுமேல்..
1.ஐந்து ஏக்கர் பரப்பில் செயல் படுகிறது.
2.புதிய இரக காய்கறிகள், மலர்கள் மற்றும் பழங்களின் பொருந்தும் தன்மை ஆய்வு செய்யப்படுகின்றன.
3.காய்கறிகள், மலர்கள், பழவகைகளின் விதைகளும் கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறன.
4.துல்லிய பணைய அடிப்படையில் காய்கறிகள், எண்ணேய் வித்துக்கள் மற்றும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காண்பிக்கப்படுகின்றன.
6. தோட்டக்கலைப் பொருப்பு திட்டம் (ஹார்ட்டி கேர்)மேல்..
1.நகர்ப்புறங்களிலும் வணிக நிலையங்களிலும் தோட்டங்கள் அமைப்பதற்கும் உதவி செய்து, பராமரிப்பும் செய்யப்படுகிறது.
2.இது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள், நடவு பதியன்கள் மற்றும் இதர இடுப்போருட்கள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறன.
3.நகர்ப்புற வீடுகளுக்கு வருடத்திற்கு 50 ரூபாயும், நிறுவனங்களுக்கு 250ரூபாயும், தொழிற்சாலைகளுக்கு 500 ரூபாயும் பதிவு கட்டணமாகக் வசூலிக்கப்படுகிறது.
7. துல்லிய பண்ணைத் திட்டம்மேல்..
1.உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய வேளாண்மை முறையாகும்.
2.விற்பனை வாய்ப்புடன் கூடிய வேளாண்மையாகவும் திகழ்கிறது.
3.எக்டர் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் சொட்டு நீர் கருவிகளும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு கன்றுகள், உரங்கள் போன்றவையும் 100 சத மானியத்தில் வழங்கப்படுகிறன.
4.கோவை தமிழ்நாடு புளாண் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உறுதுணையோடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
5.புதுவை வேளாண் துறை நிதிவுதவி அளித்து வருகிறது.
6.22.8.2008 அன்று புதுவை மாண்புமிகு முதலமைச்சர் திரு. வைத்திலிங்கம் அவர்களால் பண்டசோழ நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டது.
8. உயர் தொழில்நுட்ப நாற்றங்கால்மேல்..
1.1020 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
2.கத்திரி, தக்காளி, மிளகாய், முட்டைகோஸ், சாமந்தி மற்றும் இதர காய்கறிகளின் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
9. மாணவர்களுக்கான திட்ட ஆய்வறிக்கைமேல்..
1.மாணவர்கள் தங்களது பாடப்பிரிவின் கீழ் திசு வளர்ப்பு ஆய்வகம், உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம், மீன் வளயியல், கால்நடையியல், மனையியல், விரிவாக்கவியல், மண் வேதியியல் போன்ற தலைப்புகளில் திட்ட ஆய்வறிக்கையை மேற்கொள்கிறனர்.
2.மூன்று மாத திட்ட அறிக்கைக்கு 10,000 ரூபாயும், ஒரு வருடத்திற்கு 25,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
10. சமேதிமேல்..
bullat1  ஆத்மா திட்டத்தின் கீழ் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையமாக இவ்வேளாண் அறிவியல் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

bullat2  மாநில அளவிற்கான வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையமாக செயல்படுகிறது.

bullat2  அரசு துறையின் நடு நிலை மற்றும் கீழ் நிலை விரிவாக்க பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

bullat2  வேளாண் மேலாண்மை, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ஆய்வுகள்
மேற்கோள்ளப்படுகின்றன.


hom