1. பெயர்
இச்சங்கத்தின் பெயர் "புதுவை வேளாண்மை அறிவியல் நிலையச் சங்கம் என்று இருக்கும்.

2. அலுவலகம்மேல்...
இச்சங்கத்தின் அலுவலகம் புதுச்சேரியில் அமைந்திருக்கும்.

3.வரையறைகள்மேல்...
a.‘சட்டம்’ என்பது புதுச்சேரி யூனியன் பிரதேச அதிகாரத்திற்குட்பட்ட, 1980-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிப்புரிமைச்                   சட்டத்தைக் குறிக்கும். (மத்திய சட்ட எண் 21, 1860-ஆம் ஆண்டு)

b. தலைவர் என்பது ஆட்சிமன்றக்குழுவின் தலைவரைக் குறிக்கும்.

c. பொதுக்குழு என்பது சங்கத்தின் பொதுக்குழுவைக் குறிக்கும்.

d. ஆட்சிமன்றக்குழு என்பது சங்கத்தின் ஆட்சி மன்றக்குழுவைக் குறிக்கும்.

e. செயலர் என்பது புதுவை வேளாண்மை அறிவியல் நிலையச் சங்க அமைப்பைக் குறிக்கும்.

f. சங்கம் என்பது புதுவை வேளாண்மை அறிவியல் நிலையச் சங்க அமைப்பைக் குறிக்கும்.

g. மாநில அரசாங்கம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 239 (1) பிரிவின்படி புதுச்சேரி யூனியன்                                    பிரதேச ஆட்சி நிர்வாகத்தைக் குறிக்கும். 

h. யூனியன் பிரதேசம் என்பது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைக் குறிக்கும்.

i. ஆண்டு என்பது சங்கத்தினால் பின்பற்றப்படும் நிதி ஆண்டைக் குறிக்கும்.

4. குறிக்கோள்கள்மேல்...

1. விவசாய மக்களிடையே அவர்களின் தொழில் நுட்பத்திறனை மேம்படுத்துதல்.

2. விஞ்ஞான முறையில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த பால் பண்ணைத் தொழில், உள்நாட்டு மீன் வளர்ப்பு, பண்ணை நிர்வாகம், மனை அறிவியல் போன்ற துறைகளில் விவசாய இளைஞ்ரகளின் வேலை வாய்ப்பினை பெருக்கும் விதமாக செயல்களின் மூலம் கற்றல் முறையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழிற் பயிற்சி அளித்தல்.

3. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, மனை அறிவியல், விவசாயப் பொறியியல் போன்ற துறைகளின் வளர்ச்சி திட்டங்களுடன் தொடர்புடைய விரிவாக்க பணியாளர்களின் திறனை மேம்படுத்த பயிற்சிகளை நடத்துதல் மற்றும் மேற்படி துறைகளில் நவீன யுக்திகளைக் கையாண்டு விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்தல்.

4. இந்நிலப்பரப்பிற்கு ஏற்ற உற்பத்தி தொழில் நுட்பம் மற்றும் புதிய பயிர் வகைகள் உருவாக்க ஆராய்ச்சி மற்றும் முயற்சிகள் செய்தல்.

5. நெல் ஆய்வுத்துறை இயக்குனரகம், இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகம் (ஐஇஅத)-ன் தொழில்நுட்ப பரிமாற்ற (பஞப) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முன்னோடி செயலாக்கத் திட்டங்கள் மற்றும் ஆய்வு மையத்திலிருந்து விளைநிலம் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிர் வகைகளின் உற்பத்தி தகவல் அறிக்கை மற்றும் பின்னோக்கி வகைகளின் உற்பத்தி தகவல் அறிக்கை மற்றும் பின்னோக்கி பகுத்தாய்தல் போன்ற தொழில் நுட்ப திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

6. விஞ்ஞான விவசாய குழுக்களை அமைத்தல், வயல்வெளி தினம் மற்றும் பிற வளர்ச்சி செயல்பாடுகளின் மூலம் மேற்படி திட்டங்களை வலுப்பெறச் செய்தல்.

7. பல்வேறு பயிர் வகைகளின் விதைகளை உற்பத்தி செய்து, அதனை சான்றளித்து விவசாயிகளுக்கு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையங்கள் மூலம் வினியோகம் செய்தல்.

8. இந்திய அரசின் உயிர்-தொழில்நுட்பத்துறை மற்றும் இதைப் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து நிதி உதவி பெற்று, அரசு சாரா அமைப்புகள் (சஎஞ) மூலம் உயிர்தொழிலிநுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்தல்.

9. மாதிரிப் பழந்தோட்டங்கள், வீட்டு காய்கறித் தோட்டம், காளான் வளர்ப்பு, ஒருங்கினைந்த நெல்-மீன்-கோழிப்பண்ணை உற்பத்தி திட்டம், மண்புழு வளர்ப்பு, குப்பைகளிலிருந்து தொழு உரம் தயாரித்தல், பசுமை வீடுகள் போன்றவற்றை நிர்மானித்தல் மற்றும் மேற்கண்ட வகைகள் தொடர்பாக வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சியாளர் மற்றும் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தல்.

10. மாநில அரசு, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (ஐஇஅத) புதுவைப்பல்கலைக் கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி – வளர்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுதல்.

11. விவசாய நிலங்களை தொடர்ந்து நீண்ட காலம் நல்ல நிலையில் பயன்படுத்துவதற்காக, விவசாய பல்கலைக்கழகங்களின் பாட வல்லுனர்கள், வட்டார ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் மாநில அரசின் விரிவாக்க பணியாளர்களுடன் இணைந்து விவசாய நிலங்களை ஆய்வு செய்து அதன் முடிவுகளை ஆவணப்பதிவு செய்து, நிலங்களை மேம்படுத்துதல்.

12. உயிர்-கிராமம், சிறு விவசாயிகள் வணிகச் சந்தை போன்ற திட்டங்களை செயல்படுத்த தொழில் நுட்பங்கள் வழங்குதல் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை அதிகரிக்க மாநில அரசுடன் இணைந்து விவசாயம், தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மீன் பண்ணை போன்றவற்றை வணிக தொழில்களாக செய்ய அரசு உதவியினை ஏற்படுத்தித் தருதல்.

13. தற்போது குருமாம்பட்டில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தையும் மற்றும் இதுபோன்ற மாநிலத்தின் எல்லைக்குள் ஆரம்பிக்கப்படும் மையங்களையும் நிர்வாகம் செய்தல்.

14. விவசாயம் மற்றும் அது சம்பந்தமான துறைகளில் படிப்புகளை ஏற்படுத்தி சான்றிதழ்கள் மற்றும் பட்டயங்கள் வழங்குதல்.

15. இந்தியாவில் மற்றும் அயல்நாடுகளில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்களுடன் அனுபவங்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்.

16. விவசாயம் சம்பந்தமான் துறைகளில் ஈடுபடும் அமைப்பு, சங்கம் நிறுவனம் மற்றும் விவசாயிகளின் நன்மைக்கும் மற்றும் மேற்கூறப்பட்ட குறிக்கோள்களுக்கும் தேவையான செயல்களைச் செய்தல்.

hom