Tamil
|
English

.....................................................................................................................................................................................................................................

செயல் விளக்கங்களுடன் பயிற்சிகள் அளிப்பதற்கு பல பிரிவுகளில் செயல்விளக்கக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உழவியல்
1.  மண்புழு உரம் தயாரிப்பு :
  மலிவான ஹாலோ பிளாக் கற்களைக் கொண்டு 10' X 3' X 1.5'
அளவில் அமைக்கப்பட்ட திறந்தவேளி பாத்திகளில் மண்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன.
  எளிதாக இடம் மாற்றம் செய்யக் கூடிய வகையில்
வடிவமைக்கப்படக் கூடியது..
தோட்டக்கலை
1.  மூலிகைத் தோட்டம் :
  50' சென்ட் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
  180 வகையான மூலிகைச் செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டு
பராமரிக்கப்படுகின்றன.
  மூலிகைச் செடிகள் விற்பனையும் செய்யப்படுகின்றன.
2.   அழகீடு மலர் கூடம் (ஆர்கீடேரியம்) :
  1500 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
  டேண்ரோபியம், மோக்காரா, அரண்டா, சிம்பீடியம் போன்ற அழகிடு
மலர்களின் வளர்ப்பு முறைக்கான செயல் விளக்கக் கூடமாகவும், உற்பத்திக் கூடமாகவும் விளங்கின்றது.
3.   தோட்டக்கலை நாற்றங்கால்:
  கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, மா, பலா, நெல்லி மற்றும் சப்போட்டா போன்ற பழக்கன்றுகளும், தேக்கு, வேம்பு, அகேசியா, குல்மோகர் போன்ற மரக்கன்றுகளும், ரோஜா, கனகாம்பரம், செம்பருத்தி, போகைன்விலா போன்ற அலங்கார செடிகன்றுகளும் உற்பத்தி செய்து விற்பணை செய்யப்படுகின்றன.
4.  திசு வளர் செடிகளின் நாற்றங்கால் :
  திசு வளர்புழு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இளங்கன்றுகள்
கடினப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
  3000 சதுர அடிப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
  
5.  தென்னையில் கொக்கோ ஊடுப்பயிர் :
  தென்னையுடன் கொக்கோவை ஊடுபயிராக பயிரிடுவது குறித்து விளக்கம்
அளிக்க அமைக்கப்பட்டுள்ளது.
  புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரையோர பகுதிகளின்
முதன்மையான கூடமாக அமைக்கப்பட்டுள்ளது.
  1.2 ஏக்கர் பரப்பளவில் வெற்றிகரமாக பயிரிடப்பட்டு லாபகரமானதாக
நிருபிக்கப்பட்டுள்ளது.
  இயற்கை வேளாண்மை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
  
6.  தென்னையில் தீவனப்புல் ஊடுபயிர் :
  தென்னையுடன் தீவனப்புல் ஊடுபயிராக பயிரிடுவது குறித்து விளக்கம்
அளிக்க அமைக்கப்பட்டுள்ளது.
  இயற்கை வேளாண்மை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
  கோ 3 மற்றும் கோ 4 ரக தீவனப்புற்கள் பயிரிடப்படுகின்றன.
  
மனையியல்
1. பழம் மற்றும் காய்கறிகள் பதனிடும் கூடம் :
  இந்திய அரசின் உணவுப் பொருள் பதனிடும் தொழிற்சாலைகள்
     அமைச்சகத்தின் உரிமம் பெற்று 98 சதுர மீட்டர் பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.
  பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும் தொழில் நுட்பங்களில் பயிற்சிகள்
     அளிக்கப்படுகின்றன.
2. எளிய குளிர்சாதன தொட்டி :
  மின்சாதனக் கருவிகளின் தேவையின்றி காய்கறிகள் மற்றும் பழங்களை
     சேமிக்கும் முறை பற்றி செயல் விளக்கங்களுடன் கூடிய
     பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  110 சென்டி மீட்டர் , 60 சென்டி மீட்டர் , 60 சென்டி மீட்டர் அளவுள்ள
      தொட்டி அமைக்க சுமார் ரூ.3,000- செலவாகும்.
3. காளான் வளர்ப்புக் கூடம் :
  52.5 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
  காளான் வளர்ப்புக்கு படுக்கை வித்துக்கள் உற்பத்தி செய்து
      விநியோகிக்கப்படுகிறது.
4. காளான் வித்துக்கள் :
  புதுவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன்
2007 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

  தரமான காளான் வித்துக்கள் விற்பனை செய்யப்பட்டு புதுச்சேரி மற்றும்
தமிழக காளான் வளர்ப்போருக்கு விற்பனை செய்யப்படுகிறன.
  தொழுஉரம் தயாரிக்ககூம் இவ்வித்துக்களை உபயோகிக்கலாம்.
5. பால் காளான் கூடம் :
  பால் காளான் உற்பத்தி பற்றிய பயிற்சி அளிக்க 2008 ஆம் ஆண்டு
அமைக்கப்பட்டுள்ளது.
  பால் காளான் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது.
  
கால்நடை பராமாpப்பு
1. பசுந்தீவன பயிர் சாகுபடி செயல் விளக்க கூடம்:
  2.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
  அனைத்து வகை பசுந்தீவன பயிர், புல்ட் பயிறு தானியவகை சாகுபடி
      முறைகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
2. முயல் வளர்ப்பு செயல் விளக்க கூடம்
  100 சதுர மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
   நியூசிலாந்து வெள்ளை இன முயல்களை வளர்ந்து செயல் விளக்கப்
      பயிற்சி அளிக்கப்படுகிறது.
3. கோழி மற்றும் வான்கோழி வளர்ப்புக் கூடம் :
  கோழி மற்றும் வான்கோழி வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்க
அமைக்கப்பட்டுள்ளது.
  குறைந்த செலவில் தினசரி வருமானம் ஈட்டக் கூடிய முறைகள்
விளக்கப்படுகின்றன.
4. ஆடு வளர்ப்புக் கூடம் :
  சுய உதவிக்குழு மகளிர் கூட்டுறவு முறையில் ஆடு வளர்க்க
ஊக்குவிக்கப்படுகினறார்கள்.
  ஆடு வளர்ப்பு முறைகள் பற்றி விளக்கம் அளிகப்படுகின்றன.
மீன் வளம்
நிலையத்தினுள் ஆறுமீன் குட்டைகள் அமைத்து பயிற்சியாளர்களுக்கு செயல் விளக்கங்களுடன் பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1.  கூட்டு மீன் வளர்ப்பு :
  கட்லா, ரோகு மிர்கால், வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, சாதாக் கெண்டை
போன்ற மீன்கள் இருப்பு செய்யப்பட்டு இவற்றின் வளர்ப்பு முறைகள்
குறித்து விளக்கமளிக்கப்படுகின்றன.
2. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு:
   கோழிகளுடன் மீன் வளர்ப்பு, வாத்துகளுடன் மீன் வளர்ப்பு போன்றவற்றில்         செயல்விளக்கங்கள்.

3. நன்னீரில் இறால் வளர்ப்புக் கூடம் :
நன்னீர் இறால் ரகத்தின் விதைகள் குட்டைகளில் விடப்பட்டு குட்டை         மேலாண்மை முறைகள் விளக்கப்படுகின்றன.
4. கெண்டை இறால் வளர்ப்பு :
   மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும் முறைகள் விளக்கப்படுகின்றன.
5. அலங்கார மீன் குஞ்சுகள் :
   கப்பீஸ், மோலீஸ், ப்ளேட்டீஸ், புளு கௌரமி மற்றும் ரோஸி பார்டு போன்ற      அலங்கார மீன் குஞ்சுகள் விநியோகத்துடன் இனவிருத்தி செய்யும் முறைகள்      செய்து காண்பிக்கப்படுகின்றன.
hom